ஜெ. மறைந்த “டிசம்பர்-5 கறுப்பு நாள்” – முதல்வர் ஓபிஎஸ் உருக்கம்!

Must read

சென்னை,

ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5ந்தேதி கறுப்பு நாள் என்று தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் உருக்கமாக பேசினார்.

இன்று காலை சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது,

டிசம்பர் 5ம் தேதி ஒரு கறுப்பு நாள் என்று உருக்கமாக பேசினார்.

தமிழகத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் ஜெயலலிதா என்றும் அவர் மறைந்தா லும் தங்களின் இதயங்களில் இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.

அவர் மறைந்த தினமான டிசம்பர் 5ந்தேதி தமிழகத்தின் கறுப்பு நாள் என்று கூறினார்.

மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் அன்பை பெற்றவர் ஜெயலலிதா என்றும், தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article