சென்னை: போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர்! பாமக பாலு வழக்கு!

Must read

சென்னை,

நேற்று சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருக்கிறது என பா.ம.க வக்கீல் பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டம்  போலீசாரின் வலுக்கட்டாய வெளியேற்றத்தால் பல இடங்களில் வன்முறையாக மாறியது.

சென்னையில் பயங்கர கலவரமாக மாறியது. தீ வைப்பு, அடிதடி,பஸ் கண்ணாடிகள் உடைப்பு  என வன்முறை சம்பவங்கள்  நகர் முழுவதும் நடைபெற்றன.

ஆனால், இந்த வன்முறையை பெரும்பாலான இடங்களில் போலீசாரே ஏற்படுத்தியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

வன்முறை கலவரத்தின் போது பெண் போலீஸ் ஒருவர் முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு ஒரு குடிசைக்கு தீ வைப்பது போன்ற காட்சியும் மற்றொரு போலீஸ் ஆட்டோவிற்கு தீ வைப்பது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளன.

மேலும் சாலையின் ஒரத்தில் நின்றிருந்த பெண்களை போலீசார் அடித்து துவைப்பது போன்ற வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற  வன்முறையில் போலீசாரே தீ வைத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் பாலு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், வழக்கறிஞர் பாலு, வன்முறையில் போலீஸ் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

More articles

Latest article