சென்னை,
றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாட வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலா ளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், அத்துடன் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானத்தில் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவவும், அவரது பிறந்த நாளை   ‘தேசிய விவசாயிகள் தினம்” என அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 9-வது தீர்மானமாக ஜெ.,பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் ஜெ.,வின் திருவுருவ வெண்கல சிலையை நிறுவவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா முல்லை பெரியாறு பிரச்சினை, காவேரி பிரச்சினை போன்றவற்றில் தமிழக மக்களுக்கு ஆதரவாக போராடி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Also read