சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓபிஎஸ் தலைமையிலான குழு, சசிகலாவின் போயஸ் இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்து.
போயஸ் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ், “ தயவு செய்து நீங்கள் பொ.செ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு மாண்புமிகு சின்னம்மா  ஒப்புக்கொண்டுவிட்டார்” என்று தெரிவித்தார்.
மேலும், “ இன்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவர் பொ.செ.வாக ஆகிவிட்டார். விரைவில் கட்சி அலுவலகம் வந்து கட்சிப்பணிகளை கவனிப்பார்” என்றும் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.