அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், “மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும்” என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
இந்தகூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 11-வது தீர்மானமாக  இந்த நோபல் பரிசு கோரிக்கை தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“ எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதலமைச்சர் அம்மாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பன்ஸ் நாட்டின் ரமோன் மக்சையாய் விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாரதரத்னா விருது அளிக்கப்பட வேண்டும்.
முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினம் என்று அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் முதலமைச்சர் அம்மாவின்  திருவுருவ வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும்”  என்று  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.