சசிகலா பொதுச்செயலாளர்: ஓ.பி.எஸ். தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை

Must read

 

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமான தீர்மானம், “ஜெயலலிதாவிற்குப் பின்னர் மதிப்பிற்குரிய சின்னம்மா வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது” என்பதாகும்.
“சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசமாக பணியாற்றுவோம்” என்றும் தீர்மான வாசகங்கள் உள்ளன.
இதன் பிறகு அந்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓ.பி.எஸ் தலைமையில், கட்சி நிர்வாகிகள் சசிகலா வசிக்கும் போயஸ் இல்லம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக ஓபிஎஸ், “பொதுக்குழு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சின்ன அம்மாவை பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகலை நேரில் சென்று அவரிடம் கொடுக்கச் சென்று கொண்டிருக்கிறோம் . பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று அவரை வற்புறுத்துவோம்” என்று தெரிவித்தார்.
 

More articles

Latest article