ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சில இடங்களில் 5 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தது.

மத்திய ஜப்பானின் இஷிகாவா, நிகாதா, தோயாமா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டதாகவும் வாஜிமா துறைமுகத்தில் 1.2 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்துள்ளது.

பசிபிக் பெருங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய ஜப்பானின் கடற்கரையோர நகரங்களில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வெளியான எச்சரிக்கை குறைக்கப்பட்டது. இருந்தபோதும் மக்கள் யாரும் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.

ஜப்பானை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜப்பானின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கம் காரணமாக பல அடுக்கு மாடி கட்டிடங்கள் குலுங்கியதோடு, பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களும் குலுங்கின.

ஜப்பானில் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் மக்கள் பெருமளவு குவிந்த நிலையில் இந்த நிலநடுக்கம் அவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.