ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இஷிகாவா அருகே உள்ள வாஜிமா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் இஷிகாவா-வில் உள்ள நோடோ பகுதியில் இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள், மின்சார கம்பங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளது.

ஜப்பான் நேரப்படி நேற்று மதியம் 12:40 க்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மக்களை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் சாலைகளும் பழுதடைந்துள்ளதால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த முழுவிவரம் இதுவரை தெரியவில்லை.

2024ஐ பீதியுடன் வரவேற்ற ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும் மக்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டாம் என்று அறிவுரை… வீடியோ