கமல்ஹாசனிடம் பாட்டி வேடம் கேட்ட ஜானகி..

==========================================

தாயாக மாறி வள்ளுவன் வாக்குப்படி ரஹ்மானின் வாழ்க்கையை சித்தரித்து கட்டியதாட்டும், பி.சுசீலாவின் லவ்வராக மாறி ஆண்குரலில் பாடி அசத்தியதாகட்டும் ஜானகியின் ரூபங்கள் பல வடிவங்களில் உருமாறியது. கமலுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடியிருக்கிறார் என்று ஏற்கனவே பார்த்தோம்.


கமல் நடிப்பில் ஆகஸ்ட் 14ம்தேதி 1982ம் ஆண்டு ’சகல கலா வல்லவன்’படம் வந்தது. ஏவி எம் நிறுவனம் தயாரித்த இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். படம் சில்வர் ஜூப்ளி ஹிட்டா னது
’சகல கலா வல்லவன்’ படத்தில் கமலும் அம்பிகாவும் நடித்த ’நிலா காயுது..’ பாடல் பலரின் தூக்கத்தை கெடுத்தது. இப்பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடியிருந்தார். அதே கமல் நடித்த மற்றொரு படத்துக்கு கிட்டதட்ட அதே சாயலில் ஒரு பாடல் பாடினார். அப்போது தான் கமலிடம் பாட்டி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார் ஜானகி. அதுபற்றி பார்ப்பதற்கு முன் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ஒரு மேடை யை பகிர்து கொண்டார் ஜானகி. அப்போது அவரை பற்றி ருசிகரமாக பேசினார்.

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பற்றி எஸ் ஜானகி கூறியதாவது:
பாலசுப்ரமணியம் அந்த காலத்தில் பிசியாக இருப்பார். நானும் அவரும் இணைந்து பாடும் போது, ’நான் முதலில் பாடி விட்டுச் செல்கி றேன் பிறகு நீங்கள் பாடுங்கள்’ என்று என்னிடம் கூறுவார். அவரும் பாடி விட்டு சென்று விடுவார். அதற்கு காரணம் அவர் ஒவ்வொரு ஸ்டுடியோவுக்கும் சென்று பாட வேண்டி இருக்கும். அதனால் அப்படி செய்வார்.
என்னுடன் பாடும்போது நான் ஏதாவது தப்பாக பாட வேண்டும் என்பதற்காக நான் பாடிக்கொண்டிருக்கும்போது ஏதாவது குறும்பு செய்து கொண்டே இருப்பார். ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் எனது கணவர் அமர்ந்திருப்பார். அங்கு இவர்கள் அமர்ந்து கொண்டு என் கணவர் காதில் விழும்படி என்னைப் பற்றி கமெண்ட் அடிப் பார்கள்.
‘எவ்வளவு பெரிய பாடகி தப்பா பாடுகிறாரே’ என்று அங்கிருந்தபடிபேசுவார்கள்.
அதைக் கேட்டுவிட்டு பின்னர் என் கணவர் என்னிடம் வந்து, ’ஏன் இவ்வளவு தவறாக பாடுகிறாய், சரியாக பாட வேண்டியதுதானே’ என்பார்.
அந்த குறும்பெல்லாம் எஸ்.பி.பி நன்றாக செய்வார்.
எஸ். பி. பாலசுப்ரமணியம் திறமையானவர். பாட்டு பாடுவது மட்டுமல்ல நடிக்கிறார், டப்பிங் பேசுகிறார், படங்கள் தயாரிக்கிறார் இன்னும் கொஞ்சம் போனால் டைரக்ஷ்ன் கூட செய்வார். ஆனால் அது எனக்கு தெரியாது. அவர் எல்லாவற்றிலும் ஆல் ரவுண்டர் உடம்பிலும் ரவுண்டு (குண்டு). என்று பேச்சை முடிக்கும்போது ஒரு காமெடி குண்டும் போட்டிவிட்டு சிரித்தார். அதைக்கேட்டு எஸ்.பி.பி வெட்கப்பட்டார்.


மனோரமா:
ஆயிரம் படங்கள் நடித்து கின்னஸில் இடம் பிடித்தவர் ஆச்சி மனோரமா. அவர் மறைந்த போது அவரைப்பற்றி ஜானகி கருத்து தெரிவித்தார்.
எஸ் ஜானகி கூறியதாவது:
மனோரமா உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரை பார்க்க நேரில் சென் றோம். அவர் எழுந்துவந்து எங்களை வரவேற்று நீண்ட நேரம் எங்களுடன் நன்றாகவே பேசினார். எங்களுடன் கூட நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.
மனோரமா ஒரு நல்ல நடிகை. எந்த வேடம் கொடுத்தாலும் அதில் இறங்கி நடிப்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவர் நடிப்பை மறக்க முடியாது. அவர் பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பார், கிளாமராகவும் இருப் பார். எல்லாவிதமான கேரக்டரிலும் நடித்தவர். மனோரமா இறந்து விட்டார் என்பதை கேட்கும்போது மனதுக்கு வேதனையாக இருக் கிறது. கடவுள் அவரது ஆன்மாவுக்கு சாந்தி தர வேண்டும். அடுத்த பிறவி இருந்தால் நல்ல பிறவியாகவே பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். நடிப்பில் இருக்கும் திறமை போலவே பாடுவதிலும் அவருக்கு திறமை இருந்தது. பாடலின் பொருள் உணர்ந்து அதை தனது பாணியில் பாடுவார்.
இவ்வாறு எஸ்.ஜானகி உருக்கமுடன் கூறினார்.


கமல்ஹாசன்:
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தில், ‘இஞ்சி இடுப்பழகா..’ பாடலுக்கு தேசிய விருது வென்றார் ஜானகி. இந்தப் பாடல் அனுபவம் பற்றி கமல் ஹாசனுடன் ஒரு நிகழ்ச்சியில் எஸ்.ஜானகி பகிர்ந்து கொண்டர். அந்த ருசிகரம் இதுதான்.
எஸ் ஜானகி பேசும்போது, ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ’சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..’ பாடலை இருவரும் சேர்ந்து பாடி னோம். கமல்ஹாசனை இப்போது பார்த் தாலும் களத்தூர் கண்ணம்மாவில் பார்த்தது போலத்தான் எனக்கு தெரிகிறது. திறமையா னவர். அவர் பாட்டு பாடும் திறமைக்கு நான் நூற்றுக்கு நூறு மதிப்பெண் தருவேன். அவ் வளவு இசை நுணுக்கம் தெரிந்து பாடுவார்.
’சிவப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமலுடன் இணைந்து, ’நினைவோ ஒரு பறவை’ பாடலை பாடி இருக்கிறேன். தேவர்மகன் படத்திற்கு ’இஞ்சி இடுப்பழகா’ பாடல் பாடியபோது, என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?
’நீங்கள் ரொம்ப எக்ஸ்பிரஸ்னோடு பாடினீர்கள். நீங்களே அந்த பாடலுக்கு நடித்து கொடுங்கள்” என்றார்.
அதற்கு நான், ’எனக்கு பாட்டி வேடம் இருந்தால் கொடு நான் செய்கிறேன்’ என்றேன்.
பின்னர் ஜானகியின் பேச்சுக்கு பதில் சொன்ன கமல் ஹாசன், ’ஜானகி அவர்களின் தோற்றத்தை பார்த்தால் ஒரு சில பாடல்களை இவர்தான் பாடினார் என்றால் நம்ப மாட்டார்கள்.’ இஞ்சி இடுப்பழகா’ பாடல் கூட அப்படித்தான். உதட்டில் தாளம்போட்ட பாடி இவர்தான் பாடினார் என்றால் நம்ப மாட்டார்கள்.


’சிவப்பு ரோஜாக்கள்’ படத்தில் ’நினைவோ ஒரு பறவை..’அவருடன் பாடியது பற்றி கூற வேண்டும். விருது வழங்கும் விழா ஒன்றில் முதல் நாள் கலந்துக்கொண்டேன். அந்த மேடையில் ஒரு மேற்கத்திய பாடலை பாடி னேன். மறுநாள் ரெக்கார்டிங் ஸ்டுடியோ சென்றபோது ஜானகி பாடல் பாட வந்திருந் தார். ஆண்குரலில் பாட யாரும் வரவில்லை. ராஜாசார் என்னைப்பார்த்து
’நீயே பாடிவிடேன்’ என்றார்.
’ஐயோ நான் எப்படி? எனக்கு பாட வராது’ என்றேன்..
‘ஏன் நேற்று விருது விழாவில் நீ பாடியதைத் தான் பார்த்தேனே’ என்றார்.
’ஓ, அந்த விழாவுக்கு நீங்கள் வந்திருந்தீர்களா?’ என்றேன்,
’ஆமாம், நீ பாடிய அந்த மெட்டில்தான் இப்பாடல் இருக்கு கேட்டுபார்’ என்றார். அதே பாணியில் அந்த மெட்டு இருந்தது. பாட ஒப்புக்கொண்டேன். ஆனால் பாடல் முழுவ தையும் ஜானகிதான் பாடுவார் நான் பின்னணியில் ’பா பப் பா..’ என்று ஹம்மிங் மட்டும் கொடுத்துக்கொண்டிருப்பேன். என்றார் கமல்.

இளையராஜா:

ஜானகி பற்றி இளையராஜா கூறும்போது, ’ஜானகி அவர்கள் குரல் நன்றாக இருக்கும் என்பதற்காக அவருக்கு என் படத்தில் நான் பாட வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரது திறமையை கண்டுதான் நான் வாய்ப்பு தந்தேன். எந்த பாடகரும் இசை அமைப்பாள ரின் எண்ணத்தை புரிந்துக்கொண்டு அந்த சூழ்நிலைக்கு ஏற்ப பாட வேண்டும். அந்த வகையில் எந்த சூழலுக்காக இசை கம்போஸ் செய்கிறோனோ அதை புரிந்துக்கொண்டு பாடுவார். அதனால்தான் எனது இசையில் அவர் நிறைய பாடல்கள் பாடினார்’ என்று மனம் திறந்து ஜானகியின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டினார் இளையராஜா.

இவ்வளவு பாராட்டுகளுக்கு பின்னால் திருஷ்டி பரிகாரமாக ஜானகி இறந்து விட்ட தாக ஒன்றுக்கு இரண்டுமுறை சில விஷமிகள் வதந்து பரப்பினார்கள். அதற்காக மனம் வருந்தினார் ஜானகி.


இரண்டு மாதங்களுக்கு முன்புகூட (2020 ஜூன் மாதம்) இப்படி ஒரு வதந்தி பரவியது. அதைக் கண்டு எஸ்.பி.பி கண்கலங்கி வீடியோவில் ஒரு விளக்கம் அளித்தார்.
’காலையில் எழுந்தவுடன் எனக்கு 20 போன் கால்கள்.. ஜானகியம்மா பற்றி விசாரித்து வந்தது. உடனே ஜானகியம்மாவிடம் போன் செய்து பேசினேன் . அவர் நலமாக இருப்ப தாக கூறினார்.
சோஷியல் மீடியாவை பயன்படுத்தி இதுபோல் யாரும் விளையாட தீர்கள். இதுபோன்ற முட்டாள்தனத்தை எப்படி செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அப்படிப்பட்டவர்கள் ஷேடிஸ்ட்டு களாகத்தான் இருப்பார்கள். நல்ல செய்திகளை பரப்புங்கள் என்றார் எஸ்.பி.பி.

சாதனைக்கு ஒரு சாதனை விழா:
ஒருவரை பாராட்டுவதற்கு பெருந்தன்மை வேண்டும். கடலை தேடி நதிகள் செல்வது போல் பாராட்டும் தன்மை கொண்டவர் களைத் தேடித்தான் பாராட்டுகளும் குவிகிறது. எஸ்,ஜானகிக்கு மற்றவர்களை பாராட்டும் குணம் இருக்கிறது. தனக்கு வந்த தேசிய விருதையே சின்ன சின்ன ஆசை பாடல் பாடிய மின்மினிக்கு கிடைத் திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று சொன்னவர்.
பத்மபூஷண் விருது தேடி வந்தபோது அதை உதறித்தள்ளி, ’தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கபடுகிறார்கள்’ என்று குரல் கொடுத்து இந்திய திரையுலகை தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த வர் கானக்குயில் ஜானகி. அன்றைக்கே அவருக்கு பெரிய விழா எடுத்திருக்க வேண் டும். இனியாவது அதை தென்னிந்திய கலைஞர்கள் இணைந்து செய்தால் அது சாதனைக்கு விழா எடுத்த சாதனை விழாவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பாடகி எஸ்,ஜானகி தொடர் நிறைவு பெற்றது

-கண்ணன்