ராணுவக்கதை  சினிமாக்களுக்கு ‘கிடுக்கிப்பிடி’..

Representing picture

ராணுவம் மற்றும் ராணுவ வீரர்களைக் கதைக்கருவாகக் கொண்ட சினிமாக்கள் அவ்வப்போது வெளிவருவது உண்டு.

மற்ற திரைப்படங்கள் போன்று, மத்திய அரசின் தணிக்கை சான்றிதழ் மட்டுமே பெற்று இந்த திரைப்படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன.

இனிமேல் ராணுவத்தையும், ராணுவ வீரர்கள் குறித்தும் கதை அம்சம் கொண்ட சினிமாக்களை வெளியிட, தங்களிடம்  ‘தடை இல்லா சான்றிதழ்’’ ( என்.ஓ.சி.) பெற வேண்டும் என ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

’’இந்திய ராணுவம் மற்றும் படை வீரர்களின்  மாண்பைக் குலைக்கும் வகையில் சினிமாக்களில் காட்சிகளை சித்தரிக்க வேண்டாம்’’ எனப் படத் தயாரிப்பாளர்களை ராணுவ அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சினிமாக்கள் மட்டுமின்றி,வெப் சீரியல்களும் ராணுவ கதை அம்சம் கொண்ட தொடர்களைத் தயாரித்தால், ராணுவத்திடம் ‘தடை இல்லா சான்றிதழ்’’ பெற வேண்டும்’’ எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் சில ’’வெப்’’ சீரியல்களில், ராணுவத்தினரை அவதூறு செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றதால், இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அளித்துள்ளதை அடுத்து, ராணுவ அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

-பா.பாரதி.