சென்னை:
மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மாதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, ஆளுநரிடம்  ஜல்லிக்கட்டு பிரச்சினை மற்றும்  ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.  சுமார் 15 நிமிடம் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
vaiko-viday
ஆளுநரை சந்தித்து குறித்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
‘தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த பிரதமரிடம் வலியுறுத்துமாறும், குழந்தைகள் போல் காளைகளை தமிழர்கள் வளர்த்து வருவதை ஆளுநரிடம் எடுத்துக் கூறி விளக்கியதாகவும்’  மேலும் ரூபாய் நோட்டு பிரச்சினையால் மக்கள் படும் துயரத்தையும் கூறியாகவும்  கூறினார்.
இதற்கு முன்னதாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருப்பதால் இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, வைகோ ஆளுநரை சந்தித்து, இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை கூறியது குறிப்பிடத்தக்கது.