சென்னை:

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ அமைப்பை சேர்ந்த வர்கள் கடந்த 22ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் காரணமாக அரசு பணிகள் முடங்கி உள்ளன. பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 21ந்தேதி முதல்வரிடம் , தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் படி வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ஜாக்டோஜியோ அமைப்பினர் கொடுத்துள்ள 9 அம்ச கோரிக்கைகள் என்னென்ன என்பது  குறித்த தகவ்ல வெளியாகி உள்ளது.

கோரிக்கைகள் விவரம்: 

01-04-2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத் தினையே அமல்படுத்திட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் கண்காணிப்பாளர் கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலக, களப்பணியாளர்கள், பல்வேறு துறை களில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும், உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.

சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பலநோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர் களுக்கு  மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண்டும்.

2003, 2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைபடுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

அரசாணை எண் 56ல் இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பறிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவினை இரத்து செய்ய வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்கள் 100 மற்றும் 101 ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும். 5000 அரசுப்பள்ளிகள் மூடுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியினைப் பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினை யும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.

மேற்கண்ட 9 கோரிக்கைளை அமல்படுத்த கோரியே போராட்டம் தொடர்ந்து வருகிறது.