download (1)
 வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சார கூட்டங்களில் மாலை நான்கு மணி சுமாருககு ஜெயலலிதா வந்தாலும், காலை முதலே மக்கள் கொதிக்கும் வெயிலில் கூட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இதனால் பலர் மயங்கி விழுந்தனர்.  தவிர விருத்தாசலத்தில் 2 பேர், சேலத்தில் 2 பேர், அருப்புக்கோட்டையில் ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாயினர்.
இதே போல, கடந்த ஏப்ரல் 27ம் தேதி மதுரை ரிங்ரோட்டில் ஜெயலலிதா கூட்டம் நடந்தபோதும்,  வெட்ட வெளியில் பிற்பகல் 2 மணி முதல் கொளுத்தும் வெயிலில்  மக்கள் அடைத்து வைக்கப்பட்டார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டையை சேர்ந்த காத்தமுத்து (43) உள்பட  ஆறு பேர் வெயில் கொடுமையால் மயங்கி விழுந்தார்கள். இவர்கள் ஆறு பேரும்  மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர்.  இவர்களில் ஐவர், உடல் நலம் தேறி வீடு திரும்பினர். ஆனால் காத்தமுத்து என்பவர் தொர்ந்து அபாய கட்டத்தில் இருந்தார். கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் பொதுக்கட்டத்தில் இறந்தவர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.