மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில், பாஜக பிராந்திய அலுவலகம் என்று சிவசேனா பேனர்… வைரல்…

Must read

மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தின் முகப்பில், இது பாஜக பிராந்திய அலுவலகம் என்று, சிவசேனா கட்சியினர் பேனர் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி பெற்ற துறைகள் ஆளும் மோடிஅரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தங்களுக்கு வேண்டாத நபர்களை வழிக்கு கொண்டு வர அவர்கள்மீது சிபிஐ, அமலாக்கத்துறைகளை ஏவி மிரட்டுவது பாஜக அரசின் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில்,  மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சிவ சேனா அமைப்பினர் பாஜக பிராந்திய அலுவலகம் என்று  போஸ்டரை கட்டியுள்ளனர்.  இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது போன்ற போஸ்டர்கள் மற்ற அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு கட்டவும் இது தூண்டுதலாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More articles

Latest article