ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு புதிய தலைவர்: ஆர்.சி.பி. சிங் ஒருமனதாக தேர்வு

Must read

பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான, ஆர்.சி.பி.சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பீகாரில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவராக, கடந்தாண்டு, நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம், 2022ல் முடிய உள்ள நிலையில், பீகார் முதலமைச்சராக நவம்பரில் மீண்டும் அவர் பதவியேற்றார். அதன் காரணமாக, கட்சி தலைவர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், பாட்னாவில் நடைபெற்றது. அதில், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது.  கட்சியினுடைய ராஜ்யசபா தலைவரும், பொதுச் செயலாளருமான ஆர்.சி.பி.சிங் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

More articles

Latest article