Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

என்னை கட்சியில் இருந்து நீக்கியது நியாயம் இல்லை! எம்எல்ஏ கு.க.செல்வம்

Aug 14, 2020

சென்னை: என்னை கட்சியில் இருந்து நீக்கியது நியாயம் இல்லை; அது ஜனநாயக படுகொலை என ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ  கு.க.செல்வம் தெரிவித்து உள்ளார்.

திமுக மாவட்டச்செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த திமுக எம்எல்ஏ குக செல்வம், பாஜக தலைவர்களை டெல்லி சென்று சந்தித்து வந்தார். இது சர்ச்சையான நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு செல்வம் அளித்த பதில் திருப்தி தராததால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளிலும் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில், இன்று  சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திமுகவில் இருந்து தன்னை நீக்கியது நியாயமல்ல என்று கூறியவர், திமுகவில் இன்னும் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்களும் வெளியே வருவார்கள் எனக் கூறினார்.

இதுவரை நான் எந்த கட்சியிலும் இணையவில்லை; இது ஜனநாயக படுகொலை.  தற்போதைய நிலையில் தான் எந்த கட்சிக்கும் செல்ல நான் விரும்பவில்லை. தற்போது எம்எல்ஏவாக உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் வாய்ப்பு எனக்கு உள்ளது. யார் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார்களோ அந்த  கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன்.
திமுக தலைவர் மகன் உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் எனது பிரச்சினைக்கு காரணம். திமுகவில்  பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
திமுக தலைமை என்மீது சுமத்திய  குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை. எனது கடிதத்திற்கு பதில் கடிதம் கூட திமுக தரவில்லை. திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post navigation

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பிரபல பாடகர் எஸ்.பி. உடல்நிலை கவலைக்கிடம்…

Related Post

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer