சென்னை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராஜ எ.வ.வேலு பதவியில் உள்ளார். அவருக்குத் திருவண்ணாமலையில் சொந்தமாக ஒரு கல்லூரி உள்ளது.  மேலும் பல தொழில்களை அமைச்சர் எ வ வேலு செய்து வருகிறார்.

அமைச்சர் எ வ வேலு வரி ஏய்ப்பு செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் எ வ வேலுவின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

அமைச்சர் எ வ வேலுவின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.