மேஷம்

எதைச் செய்தாலும் அலட்சியம் இல்லாமல் கவனத்துடன் மிக நேர்த்தியாக செய்வீங்க. பண விரயம் ஏற்படலாம். வீட்டில் உள்ள பெண்கள் ஏதாவது செலவு வைத்துக் கொண்டே இருப்பாங்க. ஆனால் எல்லாம் சந்தோஷம் தரும்… உற்சாகம் தரும் செலவுங்கதான். சந்திக்க வேண்டிய நபரை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியூர் பயணத்தை மேற்கொள்ளுங்கள். உத்யோகத்துல நல்ல மாற்றங்கள் வரும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாங்க. குழப்பங்கள் மன அழுத்தம் எல்லாமே மேஜிக் போட்ட மாதிரி நீங்கும் பூர்வீக / பிதுரார்ஜித சொத்து சம்பந்தமான விஷயங்கள் நல்ல படியா முடியும். அப்பா வழித் தாத்தா பாட்டியிடமிருந்து உதவிகளும் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். குழந்தைங்களுக்கு ஹாப்பி நியூஸ் உண்டு. மனைவி அல்லது கணவருக்கு முன்னேற்றம் உண்டு. வியாபாரத்துல கணிசமான லாபம் கிடைக்கும்.  தொழில் விஷயத்துல.. உத்யோகத்துல நீங்க எதிர்பார்த்த முன்னேற்றம் கொஞ்சம் ஸ்லோவாத்தாங்க இருக்கும்.

ரிஷபம்

மருந்து வர்த்தகர்கள், மருத்துவர்கள் அதிக பலனை அடைவாங்க.  முன்கோபத்தை விலக்குவது நல்லது. அப்பிடி செய்தால் நல்ல நட்புகளை இழக்காம தக்க வைச்சுப்பீங்க. தகுந்த சமயத்தில் உறவினர்கள் உதவிகரமாக நிற்பாங்க. மேலதிகாரிகளின் அன்பை பெறுவது சுலபம்னு சூட்சுமம் பிடிபடும். ஆன்லைன் வர்த்தகங்களில் கவனமாக ஈடுபடுங்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். டாடி குட் நியூஸ் கொண்டு வருவார். திடீர் லக் உங்களைத் திக்குமுக்காடச்செய்யும். எந்த லாபமும் கொங்சம் ஸ்லோவாத்தான் இருக்கும். வர வேண்டிய கடன் அல்லது  வாடகை பாக்கி கைக்கு வரும். திருமண விழாவையோ அல்லது குழந்தை பாக்கியமோ எதிர்பார்த்தவர்களுக்கு குட்நியூஸ் உண்டு. பங்குவர்த்தகத்தில் உங்க கணிப்புகள் சரியாக அமையும். திடீர்னு உங்க பாஸ் ஒங்களைக் கூப்பிட்டுப் பதவியும் சம்பளமும் உயர்வதைத் தெரிவிப்பாரு.

மிதுனம்

ஒங்களோட புதுப்புது ஐடியாஸ் வியாபாரத்துலயும் நீங்க ஒர்க் பண்ற ஆஃபீஸ்லயும் ரொம்பவே உதவியாக இருக்கும். சின்ன பிரச்சனையை கூட பெரிதாக எண்ணி கவலைப்படுவீங்க. அதனால் தூக்கம் கெடும். தைரியமாக எந்த செயலில் ஈடுபடுங்கள். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பயணங்களின் போது பொருட்களை பத்திரமாக வெச்சுக்குங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் அவ்வளவு நன்மையை தராது. அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கையாக வேலை பார்க்க வேண்டும். வரவுக்கு மேல் செலவு இருந்தாலும்கூட அவ்வளவாய் பாதிப்பு இருக்காது. குடும்பத்துல பொறுமை அவசியம். எந்தக் காரணத்தை கொண்டும் யாரையும் குத்தி காண்பிக்காதீங்க. பெரியோர்களின் ஆதரவால் சில நல்ல காரியங்கள் நடக்கும். அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவாங்க. வழக்கறிஞர்கள் வாதத் திறமையால வெற்றி பெறுவாங்க.

கடகம்

சிறு வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறுவாங்க. ஆடை ஆபரண வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். தொழிலில் துணிந்து முதலீடு செய்வீங்க. வெளியூர்ப் பயணங்கள் மூலமாக நன்மையும் லாபமும் சந்தோஷமும் வெற்றியும் கெடைக்கும். குடும்பத்துல  திருமணம்நிச்சயமாகக் கூடப் பயணங்கள் பயன்பட சான்ஸ் இருக்குங்க. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை தாமதம் இன்றி கட்டுவது நல்லது. வேலை காரணமாக அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வீட்டுல உள்ளவங்க ஒங்களோட மனம் கோணாம நடந்துக்குவாங்க. புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம் கமிஷன் வியாபாரத்துல எதிர்பார்த்த பலன் கெடைக்கும். வியாபாரத்தில் இருந்துக்கிட்டிருந்த சிக்கல்கள் மறையும். எப்படியாவது உங்களை கவிழ்க்க வேண்டும் என்று எதிரிகள் செய்த முயற்சிகள் வெற்றி பெறாது. கவலை  வேணாம். ஹெல்த் விஷயத்துல மட்டும் எச்சரிக்கையா இருங்க.

சிம்மம்

இரும்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்க. புதிதாக அறிமுகமான நபர்களின் பழக்கங்களை நெருக்கமாக வைச்சுக்காதீங்க. எஸ்பெஷலி அவங்க எதிர்பாலினத்தவரா இருந்தா ரெண்டு மடங்கு கவனம்  தேவைங்க. நாடகம், சினிமா போன்ற துறைகளில் வேலை பார்ப்பவர்கள் பிரகாசமான பயனை அடைவாங்க. தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்க. அதற்கான பரிசு லாபமாக கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும். ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை பார்ப்பீங்க. சிலர் வேலை மாறுதலால் வேறு இடத்திற்கு செல்ல வேண்டி வரும். கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகளின் கவனத்தை கவர்ந்து ஜெயிப்பதால் சிரமம் மறைஞ்சே போகும். கணவருக்கு/ மனைவிக்கு எதை எடுத்தாலும் தாமதமாகவே பலன் இருக்கும்.

கன்னி

வெளிநாடு போறதுக்காக நீங்க எடுத்துக்கிட்ட முயற்சி வெற்றியைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். பணத்தட்டுப் பாடு படிப்படியாக குறைஞ்சு பொருள் வரவு அதிகரிக்கும்பெரிய மனுஷங்களோட ஆதரவால புதிய முயற்சிங்களைத் தொடங்குவீங்க. லாட்டரி பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். மனைவி ஆசைப்பட்டு கேட்ட பொருளை வாங்கிக் குடுப்பீங்க. குடும்பத்துல சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீங்க. ராகு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பிரபலமான மனிதர்களின் சந்திப்பு உங்களின் புகழை அதிகரிக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் மேலதிகாரிகளின் கவனத்தைக் கவருவீங்க. அரசாங்க ஊழியர்கள் மக்களின் பாராட்டை பெறுவாங்க. குடும்பத்துல யாருக்காச்சும் மழலை செல்வம் உண்டாகி குடும்பத்துல மகிழ்ச்சி பொங்கும்.

துலாம்

பழைய கடன்களை அடைப்பீங்க. வீடு கட்ட முயற்சி மேற்கொள்வீங்க. ஊழியர்கள் புதுத் திறமைங்களால நன்மை பெறுவாங்க. தவறான பழக்கம் உள்ளவங்க கிட்ட நெருக்கம் வேணாங்க. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும். குடும்ப நன்மைல அதிக அக்கறை காட்டுவீங்க. அரிய பொருட்களை விலைக்கு வாங்குவீங்க. பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுப்பீங்க. தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வீங்க. மனைவி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பீங்க. வாகனங்களில் செல்லும்போது கவனச்சிதறல் கூடாது. நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்வீங்க. வியாபாரிங்க சுமாரான பலனை பெறுவாங்க. அரசாங்கத்தின் மூலமாகவும் வெளி வட்டாரத்திலும் தொழிலுக்கு ஏற்பட்டுக்கிட்டிருந்த முட்டுக்கட்டைகள் அகலுவதற் கான நடவடிக்கைகளை ஒரு வழியா எடுப்பீங்க.

விருச்சிகம்

உங்களுக்கு எதிரா செயல்படறவங்களையும் பேசறவங்களையும் சாமர்த்தியமா சமாளிப்பீங்க. கடனை திருப்பி செலுத்த முடியாமல் கவலைப்பட்டுக்கிட்டிருந்த காலம் மாறி நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாய் மீளும்  அளவுக்குத் திருப்பிச் செலுத்தியிருப்பீங்க. தொழில்துறைகள் மந்தமாக நடந்தாலும் கையைக் கடிக்காது. போட்டி பந்தயங்கள் இப்போதைக்கு வேணாமே. இன்னும் கேட்டால் எந்த ரிஸ்க்குமே வேணாம்.  மேலதிகாரிங்களோட உற்சாகமான பாராட்டு உங்களை ஹாப்பி ஆக்கும். ரிலேடிவ்ஸ் மற்றும் நண்பர்கள் ஒங்களோட மனக்கவலைக்கு மருந்தாக அமைவாங்க. பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கெடைக்கும். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீங்க. மனைவி பிள்ளைகளுக்காக நகைகள் வாங்கி சேமிப்பீங்க. அம்மாவோட சண்டை சச்சரவுகள் வேணாமே.

சந்திராஷ்டமம்: நவம்பர் 1 முதல் நவம்பர் 4 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

தனுசு

அரசாங்க ஊழியர்கள் ஆவணங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக இருக்க வேண்டும். திருமணமாகாமல் ஏக்கத்தோட இருந்துக்கிட்டிருந்த இளம் காளையர்க்கும் கன்னியர்க்கும் திருமண வாய்ப்பு கைகூடி வரும். தொழில் எதிரிங்க இருந்த இடம் தெரியாமல் மறைஞ்சு போவாங்க. கணவன் மனைவி உறவு ஹாப்பியா இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமா முடியும். விவசாய உற்பத்தியில சாதனை படைப்பீங்க. லாட்டரி, பந்தயங்கள் அனுகூலமான பலனை தரும். நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையா இருங்க. கோபத்தை கட்டுப்படுத்துங்க. வியாபாரத்துல சில சிக்கல்கள் இருந்தாலும் அநாயாசமாய்ச் சமாளிச்சு வெளியே வந்துடுவீங்க. வெளியூர் பயணங்கள் கொஞ்சம் தாமதமாய் சக்ஸஸ் கொடுக்கும். ஆனாலும் சந்தோஷ வெற்றிதான். கவலை வேணாம்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 4 முதல் நவம்பர் 6 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

மகரம்

பிள்ளைங்களோட நடவடிக்கைகள் பெற்றோர்களுக்கு கவலை அளிச்சாலும் பாதி கற்பனை பயங்கள்தான்.  கோபித்துக் கொண்டு சென்ற உறவினர்களின் மனதை சாந்தப்படுத்தி பிரச்சனையை தீர்ப்பீங்க. வேலை காரணமாக சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாது. குடும்பத்துல மருத்துவச் செலவுங்க ஏற்பட சான்ஸ் இருக்கு. பிள்ளைங்களோட மேல் படிப்புக்காகப் பணம் கட்டுவீங்க. மங்கல காரியங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீங்க. தொழிலில் மாற்றங்கள்  உண்டாக சான்ஸ் உண்டுங்க. நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வரும். ஆபீசில் பண விவகாரங்கள்ல எச்சரிக்கையோடு செயல்படுங்கள். நீங்க பிசினஸ் செய்யறவராக இருந்தால், தொழிலுக்கு இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை தாண்டி வருமானத்திற்கு வழி வகுப்பீங்க. அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீங்க. கட்டப்பஞ்சாயத்து பண்ணவே வேணாம். கலைத்துறைல உள்ளவங்க அதிக வருமானம் பெறுவாங்க. கணவன் மனைவி மற்றும் குழந்தைங்களுக்கிடையே இருந்துக்கிட்டிருந்த கசப்புணர்வு மறைஞ்சு வெள்ளைக் கொடி பறக்கும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 6 முதல் நவம்பர் 9 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கும்பம்

பார்ட்னர்ஸ் பக்குவமாக நடந்துக்கிட்டு லாபத்தை அதிகரிப்பாங்க. சிலருக்கு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதை நழுவ விடாதீங்க. கணவருக்கும் மனைவிக்கும் நடுவில் இருந்துக்கிட்டிருந்த பிரச்னைங்க முழுவதும் மறந்தும் மறைந்தும் போகும். எந்தத் தொழிலாக இருந்தாலும் ஏற்றம் பெறுவீங்க. எதிர்ப்புகள் வரட்டுமே… அது உங்களை ஒன்றும் செய்யாது. உங்களை வெறுத்து ஒதுக்கிக்கிட்டிருந்தவங்ககூட வீடு வரைக்கும் வந்து உதவி செய்வாங்க. சொந்த பந்தங்கள் இடையே இத்தனைகாலம் இருந்துக்கிட்டிருந்த மனக்கசப்பு தீர்ந்து நிம்மதி தரும்.  சில சொந்தங்களோட பொறாமை கமென்ட்ஸையெல்லாம் கேர் பண்ணாதீங்க. தானாய் வந்து கால்ல விழுவாங்க. பணவரவு அதிகம் இருந்தாலும் செலவுங்க கொஞ்சம் இருக்கத்தாங்க செய்யும். டோன்ட் ஒர்ரி. பிகாஸ் குடும்பத்துக்குத் தேவையான முக்கியப் பொருட்களை வாங்குவீங்க. இல்லாட்டி நல்ல முறைல இன்வென்ஸ்ட் செய்வீங்க. இல்லாட்டி சுப காரியங்களுக்காகச் செகவு செய்வீங்க.

மீனம்

தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீங்க. சிறு வியாபாரிகள் சீரான லாபம் பெறுவாங்க. உடலை வேதனைப்படுத்திக் கிட்டிருந்த சின்னச்சின்ன நோய் தொந்தரவுகள் அகலும். கட்டுமானப் பணிக்கு உதவக்கூடியி பொருட்கள் டீல்  செய்யும் வியாபாரிகள் சிறப்பான லாபத்தை பெறுவாங்க. விரோதிகளின் சூழ்ச்சிகளை துடைத்து தொழிலில் முன்னேற்றம் காண்பீங்க. லேடீஸ்க்கு குட் நியூஸ் உண்டுங்க. நிறைய டிராவல் செய்த காலம் மாறும். சமூக சேவைல ஈடுபட்டு உங்க செல்வாக்கை உயர்த்திக்குவீங்க. முடிக்க முடியாத வேலைங்களை முடிச்சு மத்தவங்களை மூச்சுத்திணற வெப்பீங்க. தொழிற்சாலைகளில் துடிப்புடன் வேலை செய்வீங்க. உற்பத்திப் பெருக்கத்தால் முதலாளிகள் மகிழ்ச்சி அடைவாங்க. தாராளமாக அரசு வேலைக்கான தேர்வு எழுதலாம். மேற்படிப்புக்காக வெளிநாடு போவீங்க.