டில்லி

ருமான வரித்துறை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஒரு  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடந்த மாதம் 31 ஆம் தேதி வரை காலக்கெடு அளித்திருந்தது.   அதற்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகளின் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 

அதன்படி அவர்களால் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யமுடியாது என்பது முக்கியமான எச்சரிக்கை ஆகும்.  இதையொட்டி பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து வருமான வரித்துறையிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

எனவே இதை மனதில் கொண்டு தற்போது வருமான வரித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில்,

”ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள செயலற்றதாகி விடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.   ஆனால் அந்த பான் கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்படவில்லை. எனவே ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகளை வைத்திருப்போரும் வருமான வரிக் கணக்குகளை அளிக்கலாம். 

ஆனால் அவர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காது.

இந்த சலுகை வெளிநாடு வாழ் இந்தியர்கள் இது குறித்து ஏற்படும் சிரமங்களை மனதில் கொண்டு அவர்கள் வருமான வரிக்கணக்குகளை செலுத்தும் பொருட்டு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை ஏற்கனவே ஜூன் 30 வரை பான் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க ரூ.1000 அபராதத்துடன் காலக்கெடு அளித்திருந்தது.   அவ்வாறு இணைக்காதோர் பலர் இன்னும் உள்ளனர். எனவே அவ்வாறு இணைக்க விரும்புவோர் அபராதத்துடன் இணைக்கலாம் எனவும் வருமானவரித்துறை சலுகை அளித்துள்ளது.