செப்.26-இல் 8 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

Must read

வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட் வழியாக 8 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவிருக்கின்றன.
pslv
இதில் கடல், மற்றும் பருவநிலை தொடர்பான ஆராய்ச்சிக்காக 377 கிலோ எடையுள்ள ஸ்கேட்சாட் என்ற செயற்கைகோள் செலுத்தப்படவிருக்கிறது. வழக்கமாக செலுத்தப்படும் ராக்கெட்டானது செயற்கைக் கோள்களை ஒரே சுற்றுவட்டப் பாதையில்தான் நிறுத்தும். ஆனால் இம்முறை இரு வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படவிருக்கின்றன. இது தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாகும்.
ஸ்கேட்சாட்டுடன் இந்திய பல்கழைகழக மாணவர்கள் உருவாக்கிய 2 செயற்கைக் கோள்கள் மற்றும் அல்ஜீரியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் 5 செயற்கைக்கோள்களையும் தாங்கி 8 பிஎஸ்எல்வி-சி35 விண்ணில் சீறிப்பாய இருக்கிறது.

More articles

Latest article