ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற  டிஆர்டிஒ  மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. இதற்கு  அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஒ மற்றும் இந்திய ராணுவம்  இணைந்து தயாரித்த New Generation Agni-Prime ballistic missile-ஐ வெற்றிகரமாக சோதனை செய்து சாதனை படைத்தது. சோதனையில் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஒ தெரிவித்து உள்ளது.

கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் பல ஏவுகணைகளை டிஆர்டிஓ தயாரித்து வெற்றிகரமாக சோதனை நடத்தி வருகிறது. இந்த ஏவுகணைகள் அனைத்தும், இந்திய விமானப்படை, கடற்படை உள்பட நாட்டின் பாதுகாப்பு பணிகளில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இநத் நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட, புதிய தலைமுறையிலான அக்னி பிரைம் ஏவுகணை  சோதனையை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நேற்று (ஏப்.3) இரவு 7 மணிக்கு வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஒ  தெரிவித்துஉள்ளது.

புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணை யான அக்னி-ப்ரைம் என்ற ஏவுகணையை டிஆர்டிஓவுடன் இணைந்து வியூகப் படைகள் கமாண்ட் (SFC) நேற்று மாலை 7:00 மணியளவில் ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக பறக்கும் சோதனையை நடத்தியது. டெர்மினல் பாயிண்டில் வைக்கப்பட்டுள்ள இரண்டு டவுன்ரேஞ்ச் கப்பல்கள் உட்பட வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட பல ரேஞ்ச் சென்சார்கள் மூலம் கைப்பற்றப்பட்ட தரவுகளிலிருந்து உறுதிசெய்யப்பட்ட சோதனையின் அனைத்து சோதனை நோக்கங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றியது என தெரிவித்து உள்ளது.

இந்த சோதனையின் போது புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை சீரிய வேகத்தில் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சோதனையின் போது முப்பைடைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், டிஆர்டிஒ அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றியை தொடர்ந்து டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஏவுகணையின் வெற்றிகரமான செயல்படுத்தப்பட்டதன் மூலம் இந்திய ஆயுதப் படைகளுக்கு சிறந்த பலத்தை பெருக்க முடியும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன அக்னி 5 ஏவுகணையை முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஒ வெற்றிகரமாக சோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த தலைமுறைக்கான கண்டம் தாண்டி தாக்கும் அக்னி பிரைம் ஏவுகணயை டிஆர்டிஒ சோதித்து பார்த்து உள்ளது.