ஜ்ஜைனி

வேதங்கள்தான் அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி  உள்ளார்

இன்று நடந்த மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி பாணினி சமஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இச்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கலந்து கொண்டார்.  கூட்டத்தில் அவர் சிறப்புரை ஆற்றி உள்ளார்.

சோம்நாத் தனது உரையில்,

“அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்களே. ஆனால், மேற்குலக படைப்புகள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமான கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக அறிவியல் எனப் பலவற்றிலும் வேதங்களே முன்னோடி.

ஆரம்ப காலத்தில் சமஸ்கிருத மொழிக்கு எழுத்துரு இல்லாமல் பேச்சு வழக்கு மட்டுமே இருந்ததால், அதில் சொல்லப்பட்ட அறிவியல் அபகரிக்கப்பட்டு, மேற்குலகின் தத்துவங்கள் போல் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னாளில் தேவநாகரி எழுத்துரு வந்தபின்னர் சமஸ்கிருத அறிவு செழித்தோங்கியது.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியங்கள் வளமானவை. வானியல், மருத்துவம், அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் வானூர்தி அறிவியல் ஆகியவற்றில் கண்டுபிடிப்புகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. இதற்கு சூரிய சித்தாந்தமே உதாரணம். என் கல்விப் பருவத்தில்தான் சூரியக் குடும்பம், கால அளவு மற்றும் பூமியின் அளவு மற்றும் சுற்றளவு பற்றிப் பேசும் சமஸ்கிருத புத்தகத்தால் ஈர்க்கப்பட்டே அது தொடர்பாகப் படித்தேன்”

என்று கூறியுள்ளார்.