காசா மருத்துவமனை மீது செவ்வாயன்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த மருத்துவமனை தரைமட்டமானது இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவாமல் தடுக்க இஸ்ரேலுக்கு புறப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “இந்த தாக்குதல் மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தனது பயணத்தின் இடையே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஜோர்டான் பயணத்தை அதிபர் ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.

மேலும், இஸ்ரேலின் இந்த தாக்குதலை அடுத்து ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுவதோடு ஜோர்டானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை ஜோர்டானியர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.