ஜெருசலேம்

ஸ்ரேல் நாட்டில் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிறு அன்று வாக்களிக்க உள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வந்தார்.  அவர் மீது கடந்த சில வருடங்களாக, ஊழல் மற்றும் மோசடி புகார்கள் எழுந்து வந்தன.   நாட்டின் பல பகுதிகளிலும் அவர் பதவி விலகக் கோரி போராட்டம் நடந்த  போதிலும் நெதன்யாகு பதவி விலகவில்லை.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் அரபுக் கட்சித் தலைமையில் 8 கட்சிகள் இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்கு ஒரு முடிவை கொண்டு வந்துள்ளன.   இக்கூட்டணிக் கட்சிகள் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன.  முதலில் வலது சாரி கட்சியான யாமினா கட்சியின் தலைவர் பென்னெட் பதவி ஏற்க உள்ளார்.

வரும் ஞாயிறு அன்று யாமினா கட்சியின் தலைவர் பென்னெட் பிரதமராக ஏற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.  இந்த வாக்கெடுப்பில் பென்னட் தலைமைக்கு பெரும்பான்மை உள்ளதால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.