யோனன்

சீனாவில் வழி மாறி ஊருக்குள் வந்த யானைகள் கூட்டம் ஓய்வெடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

சீனாவில் தென் கிழக்கில் யோனன் என்னும் மாகாணம் உள்ளது.  இந்த மாகாணத்தில் வனப்பகுதிகள் நிறைந்துள்ளன.  இந்த வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.  இந்த யானைக் கூட்டங்களில் உள்ள யானைகளில் 15 காட்டு யானைகள் வழி மாறி யானான் மாகாணத்தில் உள்ள ஹுன்னிங் நகரில் கடந்த 3 ஆம் தேதி நுழைந்தன.

இவை வழக்கமாகக் காட்டுக்குள் செல்லும் பாதையில் வழி மாறி நேர் எதிர்த் திசையில் சுமார் 480 கிமீ தூரம் பயணம் செய்து இந்த நகருக்குள் வந்துள்ளன.  இவை கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி வாக்கில் பயணத்தைத் தொடங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  வழி மாறியதால் நகருக்குள் நுழைந்துள்ள இந்த யானைகள் சாலைகள் மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளில் சர்வ சகஜமாகச் சுற்றி வருகின்றன.

பொதுமக்களைக் கண்டால் விரட்டும் இந்த யானைகள் கடைகளில் கிடைக்கும் பழங்களை உணவாக உண்கின்றன  இதையொட்டி இந்த பகுதியில் பயணிக்கப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   இந்த யானைகளுக்கு உணவாக அன்னாசிப் பழங்கள் அளிக்கப்படுகின்றன.  இந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் நடந்து வருகின்றன/

இந்த நகரையொட்டியுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று யானைகள் அவ்வப்போ0து ஓய்வு எடுக்கின்றன.

இவ்வாறு யானைகள் ஓய்வு எடுக்கும் போது அந்த 15 காட்டு யானைகளையும் அதிகாரிகள் டிரோன் காமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.  இந்த யானைகள் இவ்வளவு தூரம் நடந்த களைப்பால் ஓய்வு எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.   யானைகள் ஓய்வு எடுக்கும் புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.