பியாங்யாங்

டகொரியாவில் அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகளின் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய நாடு வெகு நாட்களாகவே உலக நாடுகளில் இருந்து தம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக விமர்சனங்கள் உள்ளன.  அதே வேளையில் வட கொரியாவில் தீவிர பொருளாதார சேதம் உண்டாகி இருப்பதாகவும் அதைக் குறைக்க அந்நாட்டு அதிபர் கிம் கடும் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே உலக நாடுகள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டபோது வட கொரியா குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.   இதைத் தொடர்ந்து கேள்விகள் எழுந்த போது தமது நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அதிபர் கிம் மக்களிடையே உரையாற்றினார்.

இந்நிலையில் வட கொரிய அதிபர் ஒரு புதிய சட்டம் இயற்றி உள்ளதாகச் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

அந்த செய்தியில், “வட கொரியாவில் அதிபர் கிம் அமெரிக்க மற்றும் தென் கொரிய நாடுகளின் திரைப்படங்களை வைத்திருக்க கூடாது.  அவ்வாறு வைத்திருப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில் இளைஞர்கள் வெளிநாட்டு ஆடை, மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றுடன் தனித்துச் செயல்படும் பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளது ஆபத்தானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.