ண்டன்

ங்கிலாந்து நாட்டினர் 4 பேர் மெகுல் சோக்சியை கடத்தியதாக ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு ஒரு லண்டன் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,500 கோடி மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டுத் தப்பி ஓடினார்.  அவர் கடந்த 2018 முதல் ஆண்டிகுவா நாட்டில் தங்கி உள்ளார்.  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மீண்டும் இந்தியா அழைத்து வர முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அதிகாலை அவர் காணாமல் போனதாக ஆண்டிகுவா காவல்துறையினர் அறிவித்தனர்.  அதன் பிறகு அவர் தனது காதலியுடன் டொமினிகா தீவில் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.  அவருடன் இருந்த பெண் அவரது காதலி என்றும் காதலி இல்லை எனவும் இருவித அறிவிப்புக்கள் வெளியாகின.

இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞரான மைக்கேல் போலாக் என்பவர் ஸ்காட்லாண்டு யார்டுக்கு புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் அவர், “கடந்த மாதம் 23 ஆம் தேதி ஆண்டிகுவாவின் மறுபுறம் உள்ள தீவில் ஹங்கேரிய குடியுரிமை பெற்று  இங்கிலாந்தில் வசிக்கும் பார்பரா ஜராபிக் என்னும் பெண்ணுடன் காணப்பட்டார்.

அப்போது அவர் ஒரு பெரிய கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.   அவரை கட்டாயப்படுத்தி ஒரு சிறிய படகில் ஏற்றிச் சென்று அதில் இருந்து ஒரு பெரிய படகில் டொமினிக்காவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.   அப்போது அவர் தலைக்கு மேல் ஒரு பெரிய பையை வைத்திருந்தார்.  இந்த கடத்தலில் ஜராபிக் உடன் மேலும் சிலர் ஈடுபட்டிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

அவர்கள் குர்திப் பாக்,  குர்ஜிஜித் சிங் பண்டால், குர்மிக் சிங் ஆகிய இந்திய வம்சாவளியினரான இங்கிலாந்து நாட்டினர் ஆவார்கள்.  வெளிநாட்டில் கடும் குற்றம் செய்தவரையும்  பிரிட்டனின் சர்வதேச சட்டத்தின் கீழ்  இங்கிலாந்தில் கைது செய்து வழக்கு தொடர முடியும்.   எனவே அவர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த புகாரில் மெகுல் சோக்சி கடத்தப்பட்டது குறித்து, “ஜராபிக் வீட்டுக்கு மெகுல் சோக்சி சென்றபோது அவரை இரண்டு நிமிடங்களில் உள்ளே அழைத்துச் சென்றார்.  அப்போது சுமார் 7 அல்லது 8 பேர் வீட்டுக்குள் நுழைந்து அவரை பிடித்தனர்.  அவர் கடுமையாக போராடியும் அவர்கள் மற்றும் கால்களைக் கட்டி சக்கரநாற்காலியில் கட்டிப் போட்டனர்.

அவரை கடத்தியவர்கள் பேசிய போது இந்திய மற்றும் ஆண்டிகுவா உச்சரிப்பு தெரிந்தது.  வலிமையாக ராணுவ வீரர்கள் போல் இருந்த அவர்கள் மெகுல் போராடிய போது அவரை ஒரு ஆயுதம் மூலம் தாக்கி முகம் உட்பட உடல் எங்கும் காயப்படுத்தினர்  இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  அவரால் எதையும் பார்க்க முடியாத படி ஒரு பையை வைத்து அவர் தலையை மூடி அவரை தாக்கி உள்ளனர்.

ஒரு சிறிய படகில் சோக்சியை சக்கர நாற்காலியுடன் எடுத்துச் சென்று அங்கிருந்து ஒரு பெரிய படகில் ஏற்றி சென்றுள்ளனர்.  அதுவரை அவரது முகமூடி கழற்றப்படவில்லை.  அந்த படகில்  இரு இந்திய ஆண்களும் மூன்று கரிபியன் ஆண்களும் இருந்துள்ளனர்.  பெரிய படகில் 8 முதல் 10 வரை இருந்துள்ளனர்.  அந்த பெரிய படகு செயிண்ட் ஆசியாவில் பதிவு செய்யப்பட்ட கலியோப் ஆஃப் ஆரனே என்னும் படகாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.