சென்னை:  வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியின் போது,  அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது, அதை ஏன் பிரிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏவும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆக பிரிக்கப்பட்டு புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் அமைக்கப்படும் என்றும், விழுப்புரத்தில்  இந்த ஆண்டே  விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு செயல்படும் என்று கூறினார்.

முதல்வரின் அறிவிப்பு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது தொகுதியான காட்பாடி தொகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கு திமுக பொருளாளரும் எம்எல்ஏவுமான துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திமுக ஆட்சியின்போது, ‘கருணாநிதி கொண்டு வரப்பட்டது. அதனால், அரசு காழ்ப்புணர்ச்சியுடன், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரிக்கிறதா..?  என்று கேள்வி எழுப்பியவர், பல்கலைக்கழகம் 2ஆக பிரிக்கப்பட்டால் அதே பெயர் இருக்குமா..? ‘என்றும் வினவினார்.

பல்கலைக்கழத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டாம். இதை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும்’ என துரைமுருகன் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.  அதேபோல் ‘ஒரே பல்கலைக்கழகத் திற்கு இரு துணை வேந்தரா?’ எனவும் சரமாரியாக கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘பல்கலைக்கழகத்தை பிரிப்பதில் அரசுக்கு எந்த காழ்ப் புணர்ச்சியும் இல்லை. விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாணவர்கள் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது’.

கள்ளக்குறிச்சி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக உள்ளனர் எனவும்; அவர்கள் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது எனவும் ‘பல்கலைக்கழகத்தை பிரித்த தற்கே எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்? பெயர் வைக்கும்போது என்ன செய்வீர்கள்’ என பதில் கூறினார்.