பிச்சைக்காக வாழ வேண்டுமா? : எம்.எல்.ஏக்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் கேள்வி

Must read

சென்னை:

“சிலர் வீசி எறியும் பிச்சைக்காக வாழ வேண்டுமா” என்று கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சசிகலா தரப்பினரால் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு கேள்வி விடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்தராஜ்.

நடிகரும் அ.தி.மு.க. பிரமுகருமான ஆனந்தராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அபபோது அவர், “பொதுவாக எம்.எல்.ஏக்கள் காரில்தான் சென்று வருவார்கள். ஆனால், நாளை கூவத்தூரில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அடைக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.

உண்மைக்கு மாறான செயல் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 90 சதவீத மக்கள் இந்த (எடப்பாடி பழனிச்சாமி) அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்கும் அஞ்சாமல் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். குறிப்பாக தொகுதி மக்களின் விருப்பத்தை அறிந்து நாளை வாக்களிக்க வேண்டும். சிலர் வீசி எறியும் பிச்சைக்காக வாழ வேண்டுமா என்பதை எம்.எல்.ஏக்கள் சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

More articles

Latest article