சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

Must read

டெல்லி:

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.பி மைத்ரேயன் டெல்லியில் தேர்தல் கமிஷனரை சந்தித்து மனு அளித்தார். இந்த மனுவை தொடர்ந்து தேர்தல் கமிஷன் சசிகலாவுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், ‘‘அதிமுக எம்.பி மைத்ரேயன் மற்றும் 11 அதிமுக எம்பி.க்கள் நீங்கள் பொதுச் செயலாளராக முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்பது உள்பட 2 மனுக்களை கடந்த 16ம் தேதி மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக வரும் 28ம் தேதிக்குள் நீங்கள் உரிய விளக்கம அளிக்க வேண்டும். தவறினால் நீங்கள் பதிலளிக்க விரும்பவில்லை என்று கருதி இவ்விஷயத்தில் கமிஷன் மேல் நடவடிக்கை எடுக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் சசிகலா தற்போது அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article