டிகர் விஜய் நடிக்கும் புதியபடத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல் பரவியது. அப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளாதாகவும் கூறப்பட்டது. இப்படம் துப்பாக்கி படத்தின் 2 பாகம் என பேச்சு எழுந்தது. ஆனால் ஏஆர் முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில். ’நான் இயக்கிய துப்பாக்கி உள்ளிட்ட எந்த படத்தையும் இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணத்தில் இல்லை. விஜய்யை வைத்து இயக்கினாலும் அது புதிய ஸ்கிர்ப்ட்டாக வே இருக்கும்’ என்றார்.
இந்நிலையில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது, ஆனால் அது உறுதியாகவில்லை. இதற் கிடையில் காஜல் அகர்வாலுக்கு அவரது வீட்டார் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள், திருமண நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விஜய், ஏஆர் முருகதாஸ் இயக்கும் படம் பற்றியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.