அஜய் ஞானமுத்து இயக்க விக்ரம் நடிப்பில் உருவாகும் #ChiyaanVikram58 திரைப்படத்தில் இர்பான் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம் 10-க்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இர்பான் பதான் 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியன் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியாவுக்காக 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 173 விக்கெட்டுகளையும், ஐந்து அரைசதங்களுடன் 1,544 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்., 24 டி20 போட்டிகளிலும் விளையாடிய அவர் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.