பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரிக்க , பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் ரம்யா நம்பீசனுக்கு ஜோடியாகிறார் ரியோ ராஜ்.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அக்டோபர் 17ஆம் தேதி படப்படிப்பை துவக்கி முழு வேகத்தில் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளனர் படக்குழு .

பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சாம் ஆர்.டி.எக்ஸ். படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.கே.வசனம் எழுத, ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். கலை இயக்குநராக சரவணன் பொறுப்பேற்க, மக்கள் தொடர்பு பணிகளை சுரேஷ் சந்திரா-ரேகா டி.ஒன் கவனிக்கின்றனர்.