இரட்டை இலை முடக்கம்: சமாஜ்வாடிக்கு ஒரு நீதி.. அதிமுகவுக்கு ஒரு நீதியா?

Must read

டந்த பல நாட்களாகவே பாஜக தமிழக தலைவர் தமிழிசையும், தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று  சொல்லிவந்தனர்.

இரு நாட்களுக்கு முன், அ.தி.மு.க. (சசிகலா அணி)யைச் சேர்ந்த வைகைச் செல்வன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தேர்தல் கமிசன் தீர்ப்பு சொல்லும் முன், இவர்கள் ஏன் முன்தீர்ப்பு போல முழங்குகிறார்கள்” என்று கேட்டார்.

இரட்டை இலை முடக்கப்பட்ட பிறகு இன்று பேசியபோதும், தான் ஏற்கெனவே பேசியைதைக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், உ.பியில் ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாடி கட்சியில் இதேபோல பிரச்சினை வந்ததும், அப்போது தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பும் நினைவுக்கு வருகிறது

அப்போது சமாஜ்வாடி கட்சி, முலாயம் சிங் தலைமையில் ஒரு அணியும், அகிலேஷ் யாதத் தலைமயில் ஒரு அணியுமாக பிரிந்தது. கட்சியின் சைக்கிள் சின்னம் தங்களுக்கே என்று இரு அணிகளுமே மல்லுகட்டின. தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.

அப்போது தேர்தல் கமிசன்,  அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது. அவர் பின்னால் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் இருப்பதை காரணமாகச் சொன்னது.

அப்படியானால் இங்கே சசிகலா அணிக்குத்தான்  இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். காரணம், அந்த அணியில்தான் அதிமுகவின் பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

ஆனால் யாருக்கும் இல்லாமல் முடக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். சசிகலா அணியினர் சொல்வது போல இதன் பின்னால் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் பலமாக எழுகிறது.

தவிர, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலி்ன் வேட்புமனு தாக்கல் முடியும ்கடைசி நாள் நாளை.  இந்த நிலையில்  தேர்தல் ஆணையத்தின் முடிவு வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

More articles

Latest article