ரம்சாலா

நேற்றைய ஐ பி எல் தொடரில் டில்லியிடம் தோற்ற பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

ஐபிஎல் நேற்றைய போட்டியில் தரம்சாலாவில் டில்லி கேபிடல்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதியது.  போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 213 ரன்கள் குவித்தது.

இந்த சீசனில் எப்போதும் இல்லாத வகையில் இந்தப் போட்டியில் கேப்டன் டேவிட் வார்னர் – ப்ரிதிவி ஷா கூட்டணி அதிரடியாக ஆடியது. வார்னர் 31 பந்துகளில் 46 ரன்களும், ப்ரிதிவி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

அதை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றார் ஒன்டவுன் இறங்கிய ரூசோ. பஞ்சாப் பந்துவீச்சை பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட அவரால் டெல்லியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கடந்த போட்டியில் செஞ்சுரி விளாசிய பிரப்சிம்ரன் சிங், இம்முறை 22 ரன்களோடு நடையைக் கட்டினார். எனினும், அதர்வா தைடே மற்றும் லிவிங்ஸ்டோன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால், பஞ்சாப் வெற்றியை நோக்கி நகர்ந்தது. அதர்வா தைடே, அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேற, லிவிங்ஸ்டோன் மட்டும் அணியை காப்பாற்ற தனியாளாக போராடினார். அவருக்கு கைகொடுக்க மற்ற வீரர்கள் தவற, பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. லிவிங்ஸ்டோன் 94 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்தது.

இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது.