டெல்லி: ஐபிஎல்2022 இறுதிப்போட்டி மே 29ந்தேதி அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் மார்ச் 7ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு 10 அணிகள் களமிறங்கி உள்ளதால், போட்டிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.  அதற்கு ஏற்றார்போல அணிகளும் பிரிக்கப்பட்டு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும்.

ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த முறை லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிரா  மாநிலத்திலேயே நடத்தப்படுகிறது.

மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், ஐபிஎல்2022 இறுதிப்போட்டி மே மாதம் 29ந்தேதி அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கள் கொல்கத்தா, லக்னோவில் நடைபெறும் என தெரிகிறது.

மார்ச் 26ந்தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்: சிஎஸ்கே மோதும் அணிகள் மற்றும் தேதிகள் விவரம்…