2 புதிய அணிகள்: ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற வாய்ப்பு…

Must read

துபாய்: ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதுபோல, மேலும் 2 புதிய அணிகள் சேருவது குறித்தும் இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆட்டம், ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தற்போது வரை 8 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் ஆடிவரும்  நிலையில்,  2022ம் ஆண்டு  நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக மேலும் இரு அணியை சேர்க்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்ட 2 புதிய ஐபிஎல் அணிகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் சேருவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் மேலும் 2 அணிகள்  இணைக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டே  பிசிசிஐ அறிவித்திருந்தது.  இதைத்தொடர்ந்து, 2022ம் ஆண்டு மேலும் 2 அணிகள் இணைக்கப்படவுள்ளதால், அதற்கான ஏலம் விடும் தேதிகளையும், விதிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர் முதலில் ஐடிடி ( Invitation to tender) எனப்படும் விருப்பப்படிவத்தை அக்டோபர் 20 தேதிக்குள் (கடைசி நாள்) வாங்கியிருக்க வேண்டும். இனி வரும் ஐபிஎல் போட்டிகளின் புதிய வசதிகள், விதிமுறைகள் என அனைத்து திட்டங்களும் இந்த விண்ணப்பத்தில் அடங்கியிருக்கும். இதனை ஒருவர் வாங்க வேண்டும் என்றால் தனி நபரோ அல்லது நிறுவனமோ ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை வருமானம் ஈட்ட வேண்டும். அவர்கள் நுழைவுச்சீட்டை வாங்குவதற்கு ரூ.10,00,000 பணம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தது.

புதிய அணிகளாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஒரு அணியும், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மற்றொரு அணியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேரளாவில் இருந்த புதிய அணி உருவாகும் என கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து தற்போது எந்தவொரு தகவலும் வெளியாக வில்லை.

இதற்கிடையில்,  2 புதிய அணிகளையும் வாங்குவதற்காக இந்தியாவை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகின்றன. ஏற்கனவே அதானி குழுமம், ஆர்பி சஞ்சீவ் கோங்கே உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிர முனைப்புடன் உள்ளது. அதுபோல பாலிவுட் பிரபலங்களான நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர்.

கால்பந்துவீரர் ரொனால்டோ விளையாடி வரும் மேன்செஸ்டர் யுனைட்டெட் கிளப்பின் உரிமையாளர்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஐடிடியை வாங்கியுள்ளனர். எனவே அந்த குழுமத்தினருடன் இணைந்து ரன்வீர் மற்றும் தீபிகா ஜோடி ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். கால்பந்து உலகில் கொடிகட்டி பறந்து வரும் இந்த நிறுவனம் தற்போது உலகின் மிகவும் பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட்டான ஐபிஎல்-லும் தடம் பதித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் தற்போது 8 அணிகள் விளையாடி வரும் நிலையில், 2020ம் ஆண்டு முதல் 10 அணிகள் ஆடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டிகளும் அதிகரிப்பதுடன், மேலும் சில நாட்கள் போட்டிகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள அணிகள் விவரம்:

1) சென்னை சூப்பர் கிங்ஸ்

2) சன் ரைசர்ஸ் ஐதராபாத்

3) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

4) மும்பை இந்தியன்ஸ்

5) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

6) ராஜஸ்தான் ராயல்ஸ்

7) டெல்லி கேப்பிடல்ஸ்

8) கிங்ஸ்லெவன் பஞ்சாப்

9) ?

10) ?

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் பங்கேற்பு! பிசிசிஐ அனுமதி…

 

More articles

Latest article