டெல்லி: நாடு முடுவதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 7 ஆண்டுகளில் 157 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் இதற்காக ரூ .17,691.08 கோடியை முதலீடு செய்துள்ளது இதன் காரணமாக புதியதாக மேலும்  16,000 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாகி வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மத்திய அரசு நிதியுதவி திட்டங்கள் (சிஎஸ்எஸ்) மூலம் அதிக மனித வளங்களை வளர்க்கும் நோக்கத்தை  இடைவிடாமல் பின்பற்றி வருகிறது, இது மருத்துவ கல்வியில் சமத்துவம் மற்றும் மருத்துவ பராமரிப்பு கிடைப்பதில் உள்ள புவியியல் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை தீர்க்க முயல்கிறது” என்று  தெரிவித்துள்ளது

தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதன் மூலமும், நாட்டில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க மாநில அரசு/மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதன் மூலமும், புதிய பிஜி பிரிவுகளைத் தொடங்க மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளை வலுப்படுத்துவதன் மூலமும் மேம்படுத்துவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மத்திய நிதியுதவி திட்டங்களின் (சிஎஸ்எஸ் /Centrally Sponsored Schemes ) கீழ், நாட்டில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கும் வகையில் மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. தகுதியற்ற / பின்தங்கிய / விருப்பமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூன்று கட்டங்களின் கீழ், கடந்த 2014 முதல் 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, இதன்மூலம், 16 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட உள்ளன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 39 மாவட்டங்களில் அவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  அவற்றில் 63 மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், 6,500 எம்பிபிஸ் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இந்த மருத்துவக்கல்லூரிகள் மத்தியஅரசின் நிதி பங்களிப்புடன் தொடங்கப்படுகின்றன.

இதற்காக இதுவரையில் ரூ.17,691 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மாநில மற்றும் ஒன்றிய அரசு மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்தி, 10 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க, வடகிழக்கு மாநிலங்கள், சிறப்பு பிரிவு மாநிலங்களுக்கு 90 சதவீத நிதியை ஒன்றிய அரசும், 10 சதவீத நிதியை மாநில அரசுகளும் வழங்குகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மருத்துவக்கல்லூரியில் ஒரு ஒரு எம்பிபிஎஸ் இடத்தை உருவாக்க சராசரியாக ரூ.1.20 கோடி செலவிடப்படுகிறது. 15 மாநிலங்களில் உள்ள 48 மருத்து கல்லூரிகளில் கூடுதலாக 3,325 எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒன்றிய அரசின் நிதியாக இதுவரையில் ரூ.6,719 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய PG இடங்களை உருவாக்க மாநில/மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளை வலுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தின் முதல் கட்டம் XI திட்ட காலத்தில் தொடங்கப்பட்டது.

21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 72 அரசு மருத்துவக் கல்லூரிகள் 4,058 பிஜி இடங்களை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ₹1,049.3578 கோடி நிதி வெளியிடப்பட்டுள்ளது.

16 அரசு மருத்துவக் கல்லூரிகள் 1,741 பிஜி இடங்களை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் இன்று வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இன்றுவரை திட்டத்தின் கீழ், 6,94.534 கோடி நிதி வெளியிடப்பட்டுள்ளது.