மோடியின் தடுப்பூசி சாதனை கொண்டாட்டமும் பெட்ரோல் விலை உயர்வும் : ப சிதம்பரம்

Must read

சென்னை

பிரதமர் மோடி 100 கோடி தடுப்பூசி சாதனையைக் கொண்டாடும் போது பெட்ரோல் விலை அதிகரிப்பையும் கொண்டாட வேண்டும் என ப சிதம்பரம் கூறி உள்ளார்

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துப் பல உச்சங்களைத் தொட்டு வருகிறது.  குறிப்பாக போபால் நகரில் பெட்ரோல் விலை நாட்டில் மிக அதிகமாக லிட்டர் ரூ.116ஐ தாண்டி உள்ளது.    நாட்டில் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.110க்கும் அதிகமாக உள்ளது. 

இதைப் போல் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துப் பல இடங்களில் லிட்டர் ரூ.100க்கும் மேல் விற்கப்படுகிறது.   எதிர்க்கட்சிகள் இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  ஆயினும் விலை குறைப்புக்கான எவ்வித நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பது துயரத்தை அளிக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம், தனது டிவிட்டரில்,

“அமைச்சர்களுடன் இணைந்து 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதை கொண்டாடும் பிரதமர் மோடி பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் கொண்டாட வேண்டும்.  அடுத்ததாகச் சமையல் எரிவாயு விலை ரூ.1000 ஐ தாண்டும் போது மீண்டும் கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைக்கும்” 

எனப் பதிந்துள்ளார்.

More articles

Latest article