ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி:

ர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ந்தேதி இதுகுறித்த விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற உள்ளதால், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து விசாரித்த வந்த நிலையில், அமலாக்கத்துறையும் கைது செய்ய முயற்சி மேற்கொண்டது.

இதை எதிர்த்து, டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஏப்ரல் 16ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால் அவரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை, வரும் 27-ஆம் தேதி வரை கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது




English Summary
INX Media case: Karti Chidambaram gets relief from arrest till May2