கமல் – தமிழிசை (கோப்புப்படம்)

மல் நிறுவியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இணையதளத்தில் இருந்து, கட்சியில் சேர தனக்கு அழைப்பு வந்ததாகவும்,  பாஜக தமிழக தலைவரான தான் ஏன் கமல் கட்சியில் சேரப்போகிறேன் என்றும் தமிழிசை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இதற்கு பதிலடி  கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில், “உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே …நீங்கள் காட்டியது போல நாங்களும் “படம்” காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ?” என்று பதிவிடப்பட்டுள்ளது.

அதாவது பாஜகவில் இருந்து கட்சியில் சேர கமலுக்கும் அழைப்பு மெயில் அனுப்பப் பட்டது என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே …நீங்கள் காட்டியது போல நாங்களும் “படம்” காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ?” என்றும் பதிவிடப்பட்டுள்ளது.