சென்னை:
திவு செய்த உடனே சமையல் கியாஸ் சிலிண்டரை தட்கல் முறையில் விநியோகம் செய்யும் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் முதன் முறையாக நடை முறைக்கு வர உள்ள இந்த திட்டம் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்த அரை மணி நேரத்திற்குள் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்றும், இந்த தட்கல் முறை மூலம்ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், தட்கல் முறையில் சமையல் கியாஸ் சிலிண்டர் முறை தமிழகத்தில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், தட்கல் முறையில் சமையல் கியாஸ் சிலிண்டர் புக்கிங் கட்டணம் வழக்கமான சிலிண்டர் கட்டணத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.