நியூயார்க்: இங்கிலாந்து அரசின் இணையதளம், அமேசான், சிஎன்என் உள்பட பிரபல நிறுவனங்களின் இணையதளம் அமைந்துள்ள, இணையதள சேவை திடீரென முடங்கி உள்ளது.

உலகளவில் இணையதளத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தரவுகள் அனைத்தும் இணைதளங்கிலேயே சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இணைதள சேவையின் பயனும் அதிகரித்து வருகிறது. மேலும் சமுக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக, சமூக இணையதளங்கள் அவ்வப்போது முடங்குவதும், மீண்டும் எழுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், cலகளாவிய இணையதள கோளாறு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் அரசுத்துறை இணையங்கள் அனைத்தும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. மேலும்,  அமேசான்.காம், சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ரெடிட் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய வலைத்தளங்களும் முடங்கி உள்ளது. இணையவழி கோளாறுகள் காரணமாக முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.