வாஷிங்டன்

மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐநா பொதுச்சபையின் தலைவர் ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும்.    இந்த வாய்பு பிராந்திய அடிப்படையில் வழங்கப்படும்.  இந்த 2021 ஆம் ஆண்டுக்கான தலைவர் பதவி ஆசிய பசிஃபிக் குழுவுக்கு அளிக்கப்பட்டது.   இந்த பதவியில் இதுவரை இந்த  பிராந்தியத்தைச் சேர்ந்த மாலத்தீவில் இருந்து யாரும் இருந்தது இல்லை.

எனவே மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் போட்டியிட முன் வந்தார்.  இவருக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.  ஆனால் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சல்மாய்  ரசூல் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1966-67ல் இந்த பதவியை வகித்ததால் மாலத்தீவுக்குப் பல பிரதிநிதிகள் ஆதரவு அளித்தனர்.  இதையொட்டி நடந்த வாக்கெடுப்பில் மாலதீவு வெற்றி  பெற்றுள்ளது.  வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 193 உறுப்பினர்களில் 191 பேர் கலந்து கொண்டனர்.  இதில் அப்துல்லா ஷாகித் 143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.