மும்பை: 2022 பிப்ரவரி முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. தற்போது விலை வெகுவாக குறைந்த நிலையிலும், மத்திய அரசும், எண்ணை நிறுவனங்களும் பெட்ரோல், டீசல், எரிவாய் விலையை குறைக்க மறுத்து வருகிறது.  விலையை குறைக்காமல் சுமார் ரூ.35ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை உயர்த்தி வரும் எண்ணை நிறுவனங்கள், தற்போது விலை குறைந்த நிலையில், எரிப்பொருட்களின் விலையை குறைக்காமல் இருந்து வருவதற்கும், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்தியஅரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் டீசல் பெட்ரோல் விலை ஏற்றம் இறக்கம் இன்றி காணப்படுகிறது. சென்னையில் இன்று 121-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  ஆனா 3மாசமா குரூட் ஆயில் 25% குறைஞ்சிருக்கு. ஆனால் எரிபொருட்களின் விலையை குறைக்க மனசில்லாமல் மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 476 நாளில் 85முறை விலையை ஏற்றியுள்ள மத்தியஅரச, ,8முறை‌ மட்டுமே விலையை குறைத்திருக்கிறது. கடந்தஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற  தேர்தலுக்கு பின் டீசல் 8.16 பெட்ரோல் 12.56ரூபாயும், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு பின் டீசல் 2.69 பெட்ரோல் 1.34 ஏறி உள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தாலும், இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் அதிகப்படியான பழைய விலைக்கே விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் காலத்தில்,  கச்சா எண்ணெய் விலை உயர்த்த போது, எரிபொருட்களி விலையை மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால் அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுபட்ட கடந்த 7 மாதமாக கச்சா எண்ணை விலை குறைந்தும், எரிபொருட்களின் விலையை குறைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விலை அதிகரித்தது. ஆனால், 7 மாதத்திற்குப் பின்பு தற்போது குரூட் ஆயில்  90 டாலருக்குக் கீழ் குறைந்துள்ளது. ஆனால், மத்தியஅரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறது என்பதற்கு, எண்ணெய் வள துறை அமைச்சர் ஹதீப் சிங் பூரி  விளக்கம் அளித்துள்ளர். சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்த்த போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது என்றும்,   கச்சா எண்ணெய் விலை 88 டாலருக்குக் கீழ் வந்தால் மட்டுமே எரிபொருள் விலையில் சில தளர்வுகள் எதிர்பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.  ரஷ்யா கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதி செய்ததன் மூலம் இந்திய அரசு  ரூ.35,000 கோடி லாபம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த 5 மாதங்களாக விலையை உயர்த்தாமல் உள்ளது.