இடைக்கால பட்ஜெட்2021-22: தமிழகஅரசின் கடன்சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு…

Must read

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், துணைமுதல்வரும், நிதிஅமைச்சருமான ஓபிஎஸ் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் 11வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.     2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து,  உரையாற்றி வருகிறார்.

இன்றைய  பட்ஜெட்டில், தமிழகஅரசின் கடன்சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக இருக்கும்.

மாநில மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69 சதவீதமாக இருக்கும் *மொத்த கடன் 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது 

மேலும், 2021-22ம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்  என்றும் ,

மூலதன செலவினம் 14.41 சதவிகிதமாக உயர்ந்து ரூ.43.170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எதிர்பார்க்கப்பட்டதை விட 17.64 சதவீத வரி வருவாய் குறைந்துள்ளது என்றும், 2021-22ஆம் ஆண்டு ரூ 84 ஆயிரத்து 686.85 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article