சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Must read

சென்னை:
சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் 2129 சிறு வட்டங்களாக பிரிக்கபட்டு 1260 கொசு ஒழிப்பு நிரந்த பணியாளர்கள், 2359 ஒபந்த பணியாளர்கள் என மொத்தம் 3619 ப்ஞாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அந்த அறிக்கையில், 256 மருந்து தெளிப்பான்கள், 167 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்களை கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article