டெல்லி: நாடு முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகையை மத்திய அரசு திடீரென அதிகரித்து உள்ளது. இது  வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாகனங்களுக்கு ஆண்டுதோறும் வாகன காப்பீடு கட்டுவது வாடிக்கையாகும். இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ந்தேதி முதல்  மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் வாகன காப்பீடு இன்சூரன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட தொகை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 11 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை உயர்த்தப்படுகிறது.

இருசக்கர வாகனங்களில்  150 சிசி முதல் 350 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.1366 ஆக உயர்ந்துள்ளது.

350 சிசிக்கும் அதிக சிசி உள்ள  வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.2804 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடுத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

1000 சிசி திறன் உடைய வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 2094 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 3416 ஆக உயர்ந்துள்ளது.

1500 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 7879 உயர்ந்தப்பட்டுள்ளது.