உத்தரப் பிரதேசம் இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.55% வாக்குப்பதிவு

Must read

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவான நிலையில், காலை 11மணி நிலவரப்படி 21.55% வாக்குகள் பதிவாகி உள்ளன.

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று 7வது மற்றும் இறுதிக்கட்ட  தேர்தல் நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலானது  9 மாவட்டங்களில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்ள, ஜான்பூர், காசிப்பூர் உள்ளிட்ட 54 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் 2.10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனனர். இதறக்க  23,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு  நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

More articles

Latest article