டெல்லி: உக்ரைன் கீவ் நகரில் ரஷ்யா உக்ரைன் போரின்போது, இந்தியமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஹர்ஜோத்சிங் என இந்திய குண்டு காயம் அடைந்தார். அவரை மீட்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் போலந்து வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

உக்ரைன் மீது ரஷியா இன்று 12வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதை எதிர்த்து உக்ரைன் துருப்புகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் கடுமையான போர் மூண்டுள்ளது. இதற்கிடையில்   உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு வருகின்றனர். இதுவரை 15,920 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்த நிலயில் கீவ் நகரில் இருந்து வெளியேறி, போலந்து எல்லைக்கு செல்லும் வழியில், இந்திய மாணவர் ஹர்ஜோத்சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகளால் காயம் அடைந்தார்.  இதையடுத்து அவரை ஆம்புலன்சில் ஏற்று அவருக்கு ஆம்புலன்சில் சிகிக்சை அளிக்கப்பட்டு போலந்து எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

போலந்து எல்லை வந்தடைந்ததும், எல்லையில் உள்ள போலந்து ரெட்கிராஸ் வழங்கிய ஆம்புலன்சில் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என  இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் சந்தோக் தெரிவித்துள்ளார். துப்பாக்கி குண்டுகளால் காயம் அடைந்த அவருடன் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள்  உள்ளதாக கூறப்படுகிறது.

குண்டு காயமைந்த ஹர்ஜோத்சிங் நாளை தாயகம் திரும்புவார் என்று மத்திய அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.